மார்ச்20.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர்க்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை 20 மாதத்திற்கும் சேர்த்து வட்டியுடன் ரூ. ஆயிரத்தை மகளிருக்கு வழங்க வேண்டும் என்றார். இந்த கருத்தை அடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அண்ணாமலையை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 9 வருடங்களுக்குப் பிறகும், ‘15,00,000 ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி பாஜகவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையே !
வரும் தேர்தலுக்கு முன்பாவது இந்த தொகை வழங்கப்படுமா? இதுவரையிலான 106 மாத வட்டித் தொகையையும் சேர்த்து, 75,00,000 ரூபாயாக வழங்க வேண்டும். அதுகூட வேண்டாம் 15 லட்சம் ரூபாய்க்கான வட்டித் தொகையை மட்டுமாவது பொதுமக்களுக்கு வழங்குவீர்களா?.
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னார்கள் கருப்பு பணத்தை இன்றுவரை ஒழிக்கவில்லை. சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை இந்திய அரசு திரும்ப பெறும் என்று சொன்னார்கள் அதுவும் செய்யவில்லை.
வருடம் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தார்கள் 9 ஆண்டுகளில் சுமார் 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். எப்போது கொடுப்பீர்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.