நவ.1.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குஜராத் பாலம் விபத்து குறித்து கூறியது-
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் 134 பேர் பலியாகி உள்ளனர். பாலம் பழுது சரி செய்த மூன்று நாட்களில் விபத்து ஏற்பட்டுள்ளது . ஆளும் குஜராத் பாஜ அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் .வெறும் விபத்து என இதனை பார்க்க முடியாது . இந்த விபத்துக்கு தார்மீகபொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டியது தானே. இதற்கெல்லாம் அண்ணாமலை கவலைப்படுகிற ஆள் கிடையாது. தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை ஏதேதோ பேசி வரும் அவர் பாஜ ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரியாததைப்போல இருக்கிறார். ஏன் இன்னும் வாயை திறக்க மறுக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்யற மாதிரியும் எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்கள் ரொம்ப மோசமாக இருக்கிற மாதிரி பேசி வருகிறார். சில இடங்களில் சிறிய பிரச்சினைகளை கூட பெரிய தாக்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலை உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் குஜராத் விபத்து குறித்து எதுவும் பதில் சொல்ல மறுக்கிறார். பாஜ ஆளும் மாநிலங்கள் மோசமாக இருப்பதற்கு இது ஒரு உதாரணம் தான். இதனை விட மோசமான அரசு எப்படி இருக்க முடியும் என்றார்.