ஏப்.11.
கரூர் மாவட்டத்தில் சுமார் 8200 ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் கரூர் வட்டாரத்தில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது.
அறிகுறிகள்-
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் குஞ்சுகளும் முதிர்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து ஊற்றை உறிஞ்சுவதோடு தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால் ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் கவர்ந்து இழுக்கப்பட்டு படர்ந்து காணப்படும். இதனால் இலைகளில் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும். ரூகோஸ் சுருள் வெள்ளை பாதிப்பிற்கு உள்ளான தென்னை மரங்களை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவருவதால் 5 அடி நீளம், 15 அகமுள்ள மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் நிழலான இடங்களில் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிரீஸ் தடவி ஒட்டும் பொறியாக ஏக்கருக்கு 6- 8 என 5 உயரத்தில் கட்டி கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் விளக்கு பொறி ஏக்கருக்கு 2 என இரவு வேளைகளில் ஒளிரச் செய்து கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட இலைகளில் தெளிப்பான்கள் மூலம் வேகமாக நீரை அடித்து வெள்ளை ஈக்களை அழிக்கலாம். செலாகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேப்பெண்ணை (0.3%) 30 லிட்டர் மற்றும் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம் எண்கார்சியா இரைவிழுங்கியின் புழுப்பருவம் வெள்ளை ஈக்களின் இனம் குஞ்சுகளை உட்கொள்வதால் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் முட்டை அட்டையை சிறு துண்டுகளாக்கி அடிப்பகுதியில் காலை அல்லது மாலை வேளையில் கட்ட வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும்.
கரும்பூசணத்தை அகற்ற மைதா 5%. (ஓருகிலோ மைதாவினை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு) 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளிக்ககவும். தட்டைப்பயிர் ஊடுபயிராகவும், சாமந்தி மற்றும் சூரியகாந்தி பயிர்களை வரப்பு பயிராகவும் வளர்ப்பதால் நன்மை அதிகரிக்கும். தென்னந்தோப்புகளில் கொய்யா வாழை சீத்தா போன்ற கவர்ச்சி பயிர்களை ஏக்கருக்கு 10 என நடவு செய்யவும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிரிபூச்சிகள் வளர்வதற்கு உகந்த தழலை உருவாக்க வேண்டும்.
புதிதாக நடவு செய்ய வாங்கப்படும் தென்னங்கன்றுகள் பூச்சி தாக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்குவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து தொழில் நுட்பகளையும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைபிடிக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.