டிச.20.
24×7 செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். 13,29,988 புகார்களில்99% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன . மேலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, 50000 புதிய விவசாய இணைப்புகள் வழங்குவது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன் ரபேல் வாட்ச்சுக்கு ரசீது இருக்கிறதா இல்லையா ?. தேர்தலுக்கு முன்பு வாங்கி இருந்தால் கணக்கு காட்டி இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தேன் பில்லை வெளியிடுங்கள் என்று ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என ஆகிவிட்டது. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயமின்றி போகலாம். உன் மடியில் கனம் இருக்கிறது. தூய்மையான அரசியல்வாதி நான் சொல்கிற கருத்துக்கள் எல்லாம் சரியான கருத்து என்று கூறுபவர் பில்லை வெளியிட்டு விட்டு போக வேண்டியது தானே?. அதை ஏன் பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று கூற வேண்டும்?. வார் ரூம்போட்டு தொழிலதிபர்களை மிரட்டி வசூலிப்பது குறித்து தொழிலதிபர்கள் தொழிலே செய்ய முடியவில்லை என்று பல்வேறு கருத்துகளை கூறுகிறார்கள் என்றார்.