ஜன.18.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புசாரா பணியாளர்களின் நலனுக்காக இ- ஷ்ரம் வலைத்தளத்தை உருவாக்கியது. இந்த வலைத்தளம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஆதார் எண்களுடன் கூடிய தகவல் தொகுப்புக்காக உருவாக்கப்பட்டது. 26-08- 2021 அன்று தொடங்கப்பட்டது. 28.49 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் 26-12-2022 வரை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் நல்வாழ்வு திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்காக இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டதாகவும், இதன் மூலம் கட்டட தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்பு சாரா தொழிலாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்படும் . இந்த தகவல்களை கொண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுகாதாரம், வீட்டு வசதி, திறன் மேம்பாடு ஆயுள் காப்பீடு, கடன் வசதி, உணவு சார்ந்த திட்டங்கள் போன்றவை சிறப்பாக மேற்கொள்ளப்படும் என நிதித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் நலத்திட்ட உதவிகள் எப்போது செயல்படுத்தப்படும் என்னென்ன நலத்திட்டங்கள் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் இல்லை. செயல்படுத்தப்படும் என்று மட்டுமே உள்ளது. எப்போது செயல்படுத்தப்படும்?. இதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு? எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதிஎன்ற விவரங்கள் இல்லை. மேலும் பட்ஜெட் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது போல அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் பதிவர்கள் இந்த அறிவிப்பினால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.