ஜூலை.19.
மின்சார வாரியத்தின் நிதி நிலை, கடன் சுமை வட்டி. நிலவரம், யார் யாருக்கு கட்டணம் உயர்வு போன்ற விபரங்களை மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் அதன் விபரம்-
சரியான திட்டமிடும் திறனில்லாத கடந்த அதிமுக அரசு நம் மாநிலத்தின் கஜானாவை காலியாக்கியதோடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடன் சுமையால் தள்ளாட வைத்துவிட்டது. 2011 வரை 43,493 கோடியாக இருந்த மின் வாரியத்தின் கடன் 2021ல் அதிமுக ஆட்சி முடியும் போது 1,59,823 கோடியாக உயர்ந்திருக்கிறது.2011ல் ரூ. 4,588கோடியாக இருந்த வட்டி சுமை, அதிமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தினால், 2021ல் ரூ. 16,511 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒன்றிய அரசின் தொடர் வலியுறுத்தல்களாலும், ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்கள் நிதியுதவி தராததாலும், கீழ்கண்ட ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் மானியம் பெறவும், இந்த நேரத்தில் தமிழக மக்களை பாதிக்காத வண்ணத்தில், மின் கட்டணத்தில் திருத்தம் நிர்ப்பந்தமாகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாததால் கடும் கடன் சுமையில் இருக்கும் நமது தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுக்கும் பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், நமது அரசின் உயிர் நாடியாகிய தமிழக மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2.28கோடி மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில், கழக தேர்தல் அறிக்கை என் 222 படி, வீடுகளுக்கு நிலை கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை ரத்து.
தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 63.35 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண மாதம் ரூ 27.50/- மட்டுமே கூடுதல். தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 36.25 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண மாதம் ரூ 72.50/- மட்டுமே கூடுதல்.
தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 18.82 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண மாதம் ரூ 147.50/- மட்டுமே கூடுதல்.கடந்த அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்டிருக்கும் கடும் கடன் சுமையை கருத்தில் கொண்டு, தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு கீழ்கண்ட சிறப்பு அம்சங்களுடன் மின் கட்டண மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் தொடர் வலியுறுத்தல்களாலும், ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்கள் நிதியுதவி தராததாலும், ஒன்றிய அரசின் மானியங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் நோக்கில், உயர் மின்னழுத்த மின் நுகர்வோர்களுக்கு கீழ்கண்ட சிறப்பு அம்சங்களுடன் மின் கட்டண மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு, பசுமை கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
2,200 கோடி சேமிப்பு
முதலமைச்சர் தொலைநோக்கு திட்டங்களால்,
2021-22 நிதியாண்டில் மட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக, ரூ 2,200 கோடி சேமிப்பு எட்டப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே, 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் ஒரு வருடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு தொழில் முதலீடுகள் நமது மாநிலத்தில் குவியும் இந்நேரத்தில், மாநிலத்தின் முதுகெலும்பான, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வளர்ச்சி பாதையை உருவாக்கிடும் நோக்கிலும், தமிழ்நாட்டை உண்மையான மின்மிகை மாநிலமாக முன்னேற்றும் பொருட்டும்,நாளைய நமது தலைமுறை தன்னிறைவுடன் தலை நிமிர்ந்து நடந்திட, தமிழக மக்களாகிய உங்களின் பேருதவியையும் பங்களிப்பையும் வேண்டி, இந்த சிறிய மின்கட்டண உயர்வுக்கு தோள் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.