மே.1.
பத்திரிகையாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் நன்மைகளை செய்து வருகிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என ஜார்க்கண்ட் மாநில சட்டசபை சபாநாயகர் ரவீந்திரநாத் மாத் தெரிவித்தார்.
மே தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநில பத்திரிகையாளர் சங்கம் பாரதீஸ்ரம்ஜீவி பத்திரிகையாளர் சங்கம் இணைந்து ஒரு நாள் கருத்தரங்கை தன்பாத்தில் இன்று நடத்தியது..
டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உ.பி, மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..
தன்பாத் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை சபாநாயகர் ரவீந்திரநாத் மாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. மேலும் அம்மாநில சட்ட மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று நலவாரியம் அமைத்தது, பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்தியது.
கொரோனா காலகட்டத்தில் இறந்த 29 பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதி வழங்கியது உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது..
அம்மாநில சபாநாயகர் ரவீந்திரநாத் மாத் கூறுகையில்,
தமிழகத்தில் பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சலுகைககளை வழங்கி சிறப்பான ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன்..
அவருக்கு ஜார்க்கண்ட் மாநில மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்..
இந்த மாநாட்டில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சகாயராஜ், மாநில பொதுச்செயலாளர் பா.பிரதீப்குமார், மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்…