மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளை முன்னிட்டு மொழிப்போரில் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும், மொழிப்போர் தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார் .ஆண்டுதோறும் மொழிப்போர்த் தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகள் படங்களுக்கு மாவட்ட செயலாளர்- அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கரூர் மாவட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கவுரவப்படுத்தினார்.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இடமாற்றம்
மார்ச்.24. கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்...