மார்ச்.9.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 223 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார், 98 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.99.76,400 மதிப்பீட்டிலும் 21 பயனாளிகளுக்கு செயலியுடன் கூடிய திறன்பேசிகள் ரூ.3.40170 மதிப்பீட்டிலும், மூளை முடக்கு வாத சிறப்பு சக்கர நாற்காலி 10 பயனாளிகளுக்கு ரூ.89,000 மதிப்பீட்டிலும், பிரெய்லி கைக்கடிகாரம் 10 பயனாளிகளுக்கு ரூ.17.560 மதிப்பீட்டிலும், இயற்கை மரணத்திற்க்கான உதவித் தொகை 40 பயனாளிகளுக்கு ரூ.6.60.000 மதிப்பீட்டிலும், வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,
உடல், மனநலம் குன்றிய நிலையில் வாழ்ந்தவர்களுக்குப் புத்துணர்வும் புது வாழ்வும் அளிப்பதற்காக ஊனமுற்றார் என்ற சொல்லை நீக்கி மாற்றுத் திறனாளிகள் என அவர்களுக்குப் பெயர் தந்து அவர்கள் நலன்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் உருவாக்கினார். கலைஞர் காட்டிய வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1000 என்பதை ரூ. 1.500 ஆகவும் உயர்த்தி வழங்கினார்.
அத்துடன், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார். அதாவது, பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2000ரூபாய்என்றும்,6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6.000 ரூபாய் என்றும்,9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கி ஆணையிட்டுள்ளார்.
கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும். தொழிற்கல்லூரிகளிலும் பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்திவழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தினைசெயல்படுத்தி வருகிறார்கள். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
பூமிக்கடன் மானியம் 11 பயனாளிகளுக்கு 2.48.334 மதிப்பீட்டிலும்,சட்டப் படிப்பு உதவித் தொகை 1 பயனாளிக்கு 50.000 மும். மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 22 பயனாளிகளுக்கு ரூ.1.39,898 மதிப்பீட்டிலும் மற்றும் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி 10 பயனாளிகளுக்கு ரூ.10,50.000 மதிப்பீட்டிலும் பயனாளிகளுக்கு ரூ.1.25.91.371 மதிப்பீட்டிலான என மொத்தம் 223 நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.1,90,000 மதிப்பிட்டிலும், 28 பயனாளிகளுக்கு 1,60,000 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும் 7 நபர்களுக்கு உலமா நலவாரிய உறுப்பினர் அட்டைகளும். 5 நபர்களுக்கு கிறிஸ்துவ பணியாளர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளும். கல்வி கடன் சிறு தொழில் கடன் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு ரூ.8,20000 மதிப்பிட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மண்டலக்குழு தலைவர்கள் .கனகராஜ். ராஜா. சக்திவேல், அன்பரசு மற்றும் அரசு அலுவலர்கள் 223கலந்து கொண்டனர்.