ஜூன்.17.
இந்திய அரசின் ஜல் சக்தி துறையின் 4வது தேசிய நீர் விருதுகள் 2022 இன்று புதுதில்லியில் வழங்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கடவூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை திட்டத்திற்கு சிறந்த ஊராட்சி பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.விருதினை மாண்புமிகு ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், கடவூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லமுத்து ஆகியோரிடம் வழங்கினார்.