டிச.1.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு ( மிமீ)-: கரூர் 7.40, அரவக்குறிச்சி 9, அணைப்பாளையம் 6.20, க.பரமத்தி7, குளித்தலை 14.20, தோகைமலை 9.20, கிருஷ்ணராயபுரம் 13.50, மாயனூர் 15, பஞ்சப்பட்டி 10.60, மைலம்பட்டி, கடவூர் மழை பதிவாகவில்லை. மொத்தம் 96.10. சராசரி 8.01.
மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1257 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது தென்கரை வாய்க்காலில் 200, கட்டளை மேட்டு வாய்க்காலில் 200, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.
அமராவதி அணையின் உயரம் 90 அடி. நீர் இருப்பு 87.80 அடி. நீர்வரத்து 799 கன அடி. நீர் திறப்பு 1992 கன அடி. அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நிரம்பாத நிலை உள்ளது. மங்காஞ்சாறு குடகனாறு நொய்யல் ஆத்து பாளையம் பொன்னணி ஆறு அணைகளில் நீர் இருப்பு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.