அக்.23.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 குரூப் 2 இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி வீரர்கள் ராகுல், ரோகித் சர்மா சொற்பரன்களில் வெளியேறினர். சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாட முயற்சி செய்தார். எனினும் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து திணறிய நிலையில் அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்சர் பட்டேல் வந்தார். ஏதாவது செய்வார் என்று பார்த்தால் அவரும் இரண்டு ரன்களில் ரன்அவுட் ஆகிவிட்டார்.
11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா -கோலி அணி சேர்ந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் கடைசி ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டன. 18-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து அரை சதம் எட்டினார் . மேலும் இரண்டு பௌண்டரி விளாசி 17 ரன்கள் அணிக்கு கிடைக்கசெய்தார் .19 ஓவரை ரவூப் வீச முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. எனினும் அடுத்த இரண்டு பந்துகளை இரண்டு இமாலய சிக்சர் ஆக மாற்றி வெற்றியை அணியின் பக்கம் கொண்டு வந்தார் விராட் கோலி.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டன முதல் பந்தலையே ஹர்திக் பாண்டியா அவுட். அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன். இப்போது நான்கு பந்துகளில் 15 ரன்கள் வேண்டும். தேவைப்பட்டது. மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தது. கடைசி மூன்று பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் நாலாவது பந்தை சிக்ஸர் ஆக பறக்க விட்டார் கோலி. . அது பின்னர் நோ- பால் வழங்கப்பட்டது. போபால் ஃப்ரீ ஹிட் கிடைத்தது. அடுத்த பந்து வைடு ஆனதால் ஒரு ரன்மற்றும் மற்றொரு ஃப்ரீ வழங்கப்பட்டது. இது கிளீன் போல்ட் ஆகியும் விக்கெட் இல்லை. அதே சமயம் கோலி மற்றும் கார்த்திக் ஓடி மூன்று ரன்கள் சேர்த்தனர் . இதனால் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. தினேஷ் கார்த்திக் அவுட் ஆகிவிட்டார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது அஸ்வினுக்கு நவாஸ் அதை வைடு ஆக வீசினார் . அடுத்த பந்தையும் அஸ்வின் தூக்கி அடித்து வெற்றிதேடி தந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இறுதிவரை கோலி ஆட்டம் இழக்காமல் 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசிஇருந்தார்.