நவ.5.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து 62 ரன் சேர்த்தனர். ரோகித் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து அடித்து ஆடினார் கோலி. ஸ்ரேயஸ், 77 ரன்களில் எடுத்தார். கே.எல்.ராகுல் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
மறுபக்கம் கோலி நிலைத்து நின்று பந்துகளை துவம்சம் செய்தார். 121 பந்துகளில் 101 ரன் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 49-வது சதம் இது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த கோலிக்கு இன்று பிறந்தநாள்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. டிகாக், பவுமா, மார்க்ரம், கிளாசன், வான்டர் டுசன், மில்லர், கேஷவ் மகாராஜ், யான்சன், ரபாடா, இங்கிடி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 27.1 ஓவர்களில் 83 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. அதன் மூலம் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது
இந்தப் போட்டியில் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றியை வசமாக்கினார். பவுமா, கிளாசன், மில்லர், கேஷவ் மகாராஜ் மற்றும் ரபாடா ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.