“ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.
ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் களம். பள்ளப்பட்டி உள்ளே ஆடுவர முடியாது வந்தாலும் வெளியே செல்ல முடியாது”..
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஆய்வுகளத்தில் மட்டுமல்ல சோசியல் மீடியா முழுவதும் இதுதான் ட்ரெண்ட். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் அதிரடி பேச்சு வைரல் ஆகி வருகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டியில் நடைபெற்ற இத்தார் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியில் அப்போதுதான் சேர்ந்திருந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கேட்டு போட்டியிடப் போகிறார் என்றதும் தேர்தல் வியூகத்தை செந்தில் பாலாஜி மாற்றி அமைத்தார். இதனால் அண்ணாமலை தோல்வி அடைந்தார். இதுகுறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதியில், பேராசிரியர் ஜவாகிருல்லா போட்டியிட இருந்ததாகவும் இது குறித்து அவரிடம் பேசி அதன் பின்னர் திமுக வேட்பாளர் களம் இறக்கப்பட்டதாகவும், ஜவாஹிருல்லா வேறு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகிவிட்டார்.இதில் தனக்கும் பங்கு உண்டு எனவும் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோற்றதால் அவருக்கு பெரும் அரசியல் பின்னடைவு ஏற்பட்டது. அதே தேர்தலில் வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், காந்தி போன்றோர் வெற்றி பெற்று கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்து விட்டனர். இதில் இருவர் மாநில தலைவர் பதவி தங்களுக்கு வேண்டும். தோற்ற அண்ணாமலைக்கு ஏன் மீண்டும் பதவி கொடுக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர். இந்த முதல் அரசியல் தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவு தான் செந்தில் பாலாஜி மீது, அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதற்கும், இ.டி. யை ஏவி விட்டதற்கும் காரணம் என செந்தில்வேல் குறிப்பிட்டுள்ளார்.