டிச.1.
விழுப்புரம் மாவட்டம் மின்சார வாரிய அலுவலகத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சீரைமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு, மின் விநியோகம் சீராக கொடுத்திட ஆலோசனைக் கூட்டம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார்,
விழுப்புரம் எம்.எல்.ஏ.மருத்துவர் லட்சுமணன், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ்அன்னியூர் சிவா உடன் இருந்தனர்..
பின்னர் இரவில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கடப்பாக்கம் பகுதியில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு இருந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.