ஏப்.22.
, ஏப்.21: அதிமுக கட்சி உள்ளிவிவகாரங்களில் தலையிடாமல் முதல்வர் நாகரிமாக நடந்து கொண்டதாக பேரவைத் தலைவர் அப்பாவு பாராட்டு தெரிவித்தார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று முடிந்த பிறகு பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது:
அரசியல் கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் இங்கு வந்திருக்கிறோம். தோழமைக் கட்சி யாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் அவர்களை முதல்வர் எப்படி நடத்தினார், அரவணைத்துச் சென்றார் என்பதைப் பார்த்தோம. கட்சிகளைத் துன்புறுத்த வேண்டும் என்று ஒருபோதும் என்று ஒருபோதும் முதல்வர் எண்ணியதில்லை. அவர்களை முழுமையாக பேச அனுமதித்தார் முதல்வர்.
ஓ பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் ஐயப்பன் ஆகியோரை அவர்களது இயக்கத்தில் இருந்து நீக்கியதாக கடிதம் கொடுத்தனர் அது என்னுடைய ஆய்வில் உள்ளது. அவர்களை பழிவாங்க வேண்டும் என சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல நினைத்திருந்தால், அதிமுக 1, அதிமுக 2 என்று பிரித்துக்கொடுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடையூறு செய்திருக்க முடியும். ஒரு காலத்தில் ஜா அணி, ஜெ அணி என இருந்ததை எல்லாம் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் எவ்வளவு பெருந்தன்மையாக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களது உள்வகாரங்களில் தலையிடுவது நாகரீகம் இல்லை என்று கூறி ஜனநாயகப்பூர்வமாக கண்ணியம் மிக்க அரசியலையும் ஆட்சியையும் முதல்வர் நடத்தி வருகிறார்.
அரசுமீது குற்றங்கள் சொல்வதற்குத்தான் எதிர்க்கட்சிகள் உள்ளன என்பதை கருணா நிதிக்கு பிறகு உண்மையாக்கிய பெருமை முதல்வர் மு.கஸ்டாலினை சாரும் என்றார்.