பிப்.22
கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்டம் முழுதுவதும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 842 வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த வாக்குகள் 7 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன. மொத்தம் 45 மேஜைகளில் 95 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கரூர் மாநகராட்சிக்கு வாக்கு எண்ணும் மையமான கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பாக ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். . வாக்கு எண்ணும் முகவர்களும் சோதனை செய்யப்பட்டு மையத்திற்கும் அமைதிக்கப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7 வாக்கு எண்ணும் மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள வாக்குகள் எண்ணப்படும்.
2