மே 14-
தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. பொதுச் செயலாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்களுக்கு 01.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டியிருந்தது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைக்கான குழு மட்டும் 07.12.2019 அமைக்கப்பட்டது. ஆனால் கூட்டம் ஏதும் நடைபெறவில்லை. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளை அதிமுக ஆட்சி பறித்தது. திமுக ஆட்சி அமைந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கடுமையான கடன் சுமையிலும், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குழு மாற்றி அமைக்கப்பட்டு, எட்டு முறை பேச்சு வார்த்தை நடைபெற்று ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 1.6 சதவீத ஊதிய உயர்வு , 02. 12 2019 முதல் 3 /2022 வரை 28 மாதங்களுக்கு ரூ. 500, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை 01.04.2022 முதல் 31/5/2023 வரை கணக்கிட்டு வழங்கவும், 01.12. 2019 அன்று 10 வருடங்கள் பணி முடித்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சர்வீஸ் வெயிட்டேஜ் 3 சதவீதம் எனவும் அனைவரும் மகிழும் வண்ணம் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தின் மூலமாக முதல் ஊதிய உயர்வை வழங்கிய கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பரிசாக மின்வாரிய தொழிலாளர்கள் , அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் என 76 ஆயிரம் பேர் மனம் மகிழும் வகையில் ஊதிய உயர்வு அளித்த முதலமைச்சர், மின்சார துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.