ஜன.23.
சென்னை கொசப்பேட்டையில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதி மற்றும் திமுக எம்பி கனிமொழி மற்றும் சென்னை மாநகராட்சிநிதியில் கட்டப்பட்டுள்ள சமூக நலக்கூடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் சென்னை கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 9 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் .
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், புதுமண தம்பதிகள் எப்படி வாழக்கூடாது என்று நான் சொல்லி இருக்கிறேன். தயவு செய்து எடப்பாடி பழனிச்சாமி , ஓ .பன்னீர் செல்வம் மாதிரி வாழ்ந்திடாதீர்கள். சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். நான் சட்டமன்றத்தில் பேசிய போது, அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, அண்ணன் ஓபிஎஸ் அவர்களே நீங்கள் இரண்டு பேரும் தவறுதலாக என்னுடைய காரில் ஏறி சென்றுவிட்டாலும் கூட தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் . ஆனால் கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்றேன். அப்போது அண்ணன் ஓபிஎஸ் எழுந்து எந்த காலத்திலேம் எங்களது கார் அங்கு போகாது என்றார். ஆனால் நேற்று காலையில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயம் சென்று இரண்டு மணி நேரம் காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு வெட்கமில்லாத எதிர்கட்சியாக.. இதற்கு மேல் நான் அவர்களை பேச விரும்பவில்லை என்றார்.
அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.