மார்ச்.4.
இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் ராயனூர் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். கரூர் மாவட்டதில், ரூ. 267 கோடி மதிப்பில், 1,22,019 பயனாளிகளுக்கு, அவர்களது வாழ்வாதாரம் மேம்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், கரூர் மாவட்டதில், ஒரே நாளில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மரக்கன்றுகள் நட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவக்கி வைத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம சுந்தரி , மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
கரூர் மாவட்டம் அரசு திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் நம்பர் ஒன். எந்த பணியாக இருந்தாலும் வேகமாக செய்து முடிப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அந்த வகையில் முதன்மை மாவட்டமாக கரூர் திகழ்கிறது. அவருக்கு உறுதுணையாக இருப்பது பொது மக்களாகிய நீங்கள் தான். தலைவர் கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராகவும், 13 முறை எம் எல் ஏ வாகவும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டவர். குளித்தலை தொகுதி தான் அவர் போட்டியிட்ட முதல் தொகுதி . அதேபோல் நான் போட்டியிட்ட முதல் தொகுதியாகவும் குளித்தலை இருக்க வேண்டும் என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார் . குளித்தலையில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்றார். நான் நின்றிருந்தால் என்னை வெற்றி பெற வைத்திருப்பார். நான் தற்போது வெற்றி பெற்ற தொகுதியும் கலைஞரின் தொகுதி தான். சென்னையிலே இருப்பதால் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன் .
மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டார். 20 மாதம் தான் கடந்திருக்கிறது.இன்னும் 3ஆண்டு நிறைவிற்குள் நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் . கரூர் மாவட்டத்திற்கு டென்னிஸ் அரங்கம், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றார்.