சபிப்.9.
திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார். கரூர் மனோகரா கார்னரில் மின்சாரத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது-
முதன் முதலாக குளித்தலையில் போட்டியிட்ட தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த மாவட்டம். ஆட்சிக்கு வந்தவுடனேயே கொரோனா தொற்றுபாதிப்பு. பெட் இல்லை. ஆக்சிசன் இல்லை என்ற நிலை மாற்றப்பட்டது. கொரோனா நிதியாக ரூ.4ஆயிரம், பெட்ரோல் விலை குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், இல்லம் தேடி கல்வித் திட்டம்என்ற பெயரில் 2 ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டது. நம்மை காக்கும் திட்டம், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மின்சாரத்துறையில் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் சேவை மையம்,என பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நீட் ரத்து தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் தளபதி அரசு ஈடுபட்டுள்ளது. சொன்னது என்னாச்சு என்று எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து கூறிவருகிறார். நான் கண்டிப்பாக சொல்கிறேன். நீட் ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். உங்கள் ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்னரைஆண்டு அது என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நிலைமையைச் சொல்லவே இல்லை . நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். கவர்னர் திருப்பி அனுப்பியஒரு வாரத்தில் மீண்டும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். நீட் ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். அதிமுக பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிக்கொண்டிருப்பவர் நமது தலைவர்.
கரூர் மாவட்டத்தில் ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் கொரோனா நிவாரண நிதி, தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம் சுகாதாரத் துறை மூலமாக மகப்பேறு திட்டம், கொரோனா இழப்பு தலா 50 ஆயிரம் வீதம் ரூபாய் 3 கோடி உள்ளிட்ட பொது மக்களுக்கு வழங்கிய அரசு நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டு பேசினார்.