ஜூன்.5.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான K.H. இளவழகன் முன்னிலையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியணை பகுதியில் மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்று நடடும் நிகழ்வில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், கரூர் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மொத்தம் 16 மரக்கன்றுகளை நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி .P.அனுராதா செய்திருந்தார்.