ஜூன்.3.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை – வாடிப்பட்டி சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை எளிதாக்கும் வகையில், கோயம்புத்தூர்- நாகர்கோவில் பகல் நேர ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் எண்.16322
கோயம்புத்தூர் – நாகர்கோவில் தினசரி ரயில், காலை 8.00 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து புறப்படும. , இந்த ரயில் 04.06.2025 முதல் 30.06.2025 வரை திண்டுக்கல் சந்திப்பு நாகர்கோவில் சந்திப்புக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் கோயம்புத்தூர் சந்திப்பு முதல் திண்டுக்கல் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்; மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் திண்டுக்கல் சந்திப்பு நாகர்கோவில் சந்திப்புக்கு இயக்கப்படாது. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.