ஜூலை.18.
கலை பண்பாட்டுத்துறை கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கரூரில் செயல்பட்டு வருகிறது.தேவராட்டம், கரகாட்டம். ஒயிலாட்டம் தப்பாட்டம் ஆகிய கலைகளில் வாரம் இரண்டு நாட்கள் (வெள்ளி மற்றும் சனி) மாலை 4 மணி முதல் 6 மணி வரை கிராமிய கலைப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். கலை ஆர்வமுடையவர்கள் மட்டுமல்ல கலைஞர்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் இவ்வகுப்பில் சேரலாம். ஒருஆண்டு பயிற்சிக்கு பின் அரசு தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகச்சான்றிதழ் வழங்கப்படும்.
17 வயதுக்கு மேற்பட்டுள்ள எந்த வயது உள்ளவர்களும் சேரலாம். குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. எட்டாம் வகுப்புக்கு குறைவான கல்வி தகுதி உடையவர்களும் சேரலாம். ஆனால் தேர்வுக்கு அனுப்ப இயலாது. சான்றிதழ் கிடைக்காது. ஆண்டுக்கட்டணம் ரூ 500. பயிற்சியில் ஜீலை 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மேலும் தகவலுக்கு பொறுப்பாளர் ஜெயராஜ் (தொடர்பு எண் 9865036825). இவ்வாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.