மே.26.
கரூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கம்பம் விடுதல் நிகழ்ச்சி 28.05.2025 ஆம் தேதி நடைபெறவிருப்பதால் கரூர் நகர காவல் நிலைய சரகத்தில் கீழ்க்கண்டவாறு 28.05.2025 ஆம் தேதி ஒரு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
*வெங்கமேடு வழியாக வரும் பக்தர்களின் வாகனங்கள் இரத்தினம் சாலை வழியாக ரயில்நிலையம் அருகில் உள்ள பார்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தம் செய்துவிட்டு பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இரயில் நிலையத்தில் இருந்து கோவில் செல்லும் வழியில் எந்த இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படாது.
*வாங்கல் மற்றும் பஞ்சமாதேவி வழியாக வரும் பக்தர்கள் பாலமாள்புரம் பெட்ரோல்பங்க் மற்றும் பாலம்மாள்புரம் கோவில் அருகே வாகனத்தை நிறுத்தம் செய்துவிட்டு பக்தர்கள் மட்டும் ஐந்துரோடு வழியாக கோவில் மற்றும் ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாலம்மாள்புரத்தில் இருந்து எந்த வாகனமும் ஐந்துரோடு செல்ல அனுமதிக்கப்படாது.
*வாங்கல் மற்றும் பஞ்சமாதேவியில் இருந்து வரும் பொதுமக்கள், மருத்துவமனை மற்றும் கரூர் பேருந்து நிலையம் செல்வதற்கு பஞ்சமாதேவி, அரசுகாலனி, வாங்கப்பாளையம் சோதனைசாவடி, வெங்கமேடு, சர்ச் கார்னர், திண்ணப்பா கார்னர் வழியாக பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
*தொழிற்பேட்டை, சனப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை பசுபதிபாளையம் வாட்டர் டேங்க் மற்றும் தெற்கு தெருவில் பார்கிங் செய்துவிட்டு பசுபதிபாளையம் புதிய அமராவதி பாலம் மற்றும் பாலத்தின் அடியின் வழியாக ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் கரூர் பேரூந்து நிலையம் செல்ல வேண்டுமென்றால் கொளந்தாகவுண்டனூர் தெரஸா கார்னர், சுங்ககேட், திருமாநிலையூர் வழியாக கரூர் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள்.
*காந்திகிராமம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்கள் பசுபதிபாளையம் அருணாசலநகர் 3வது கிராஸ் அருகே உள்ள பார்கிங் இடத்தில் வாகனங்களை பார்கிங் செய்துவிட்டு பசுபதிபாளையம் காவல்நிலையம் வழியாக அமராவதி அனுமதிக்கப்படுவார்கள்.
*தாந்தோணிமலை, திருமாநிலையூர் பகுதிகள் வழியாக பக்தர்கள் வரும் வாகனங்களை லைட்ஹவுஸ் அருகில் உள்ள மக்கள்பாதை பார்கிங் இடத்தில் இருசக்கர வாகனத்தை பார்கிங் செய்துவிட்டு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாரகள்.
*கோவை சாலையில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை ஸ்டேட் பேங்க் கேட் வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் உள்ளே பார்கிங் செய்துவிட்டு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
*திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் MLA OFFICE அருகே உள்ள கேட் வழியாக வெளியே வந்து உழவர் சந்தை வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.