மார்ச்.20.
கரூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் இன்று கரூர் சின்ன கொங்கு மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் உட்கோட்ட டிஎஸ்பி செல்வராஜ் தலைமை வைத்தார். போக்குவரத்து காவல் டவுன் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு, பசுபதிபாளையம் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், மாமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் அன்பரசன், வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன், வீவிங் நிட்டிங் சங்கத் தலைவர் தனபதி, மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தனர். நகரில் போக்குவரத்து நெரிசலை மேம்பாடு செய்வது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை கூறினர்.
கூட்டத்தில், கரூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகரத்திற்குள் வரும் சரக்கு வாகனங்கள் நூல் மற்றும் ஜவுளி வாகனங்கள் ஈச்சர், 6 மற்றும் 10 சக்கர கனரக வாகனங்கள், பார்சல் சர்வீஸ் வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களும் கரூர் கோவை பிரதான சாலையில் செல்வதற்கு பதிலாக அண்ணா சாலை, காமராஜபுரம் ரோடு, வையாபுரி நகர் ரோடு, எம்ஜிரோடு சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது சம்பந்தமாக பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க கடை உரிமையாளர்கள், வணிக, வியாபார பெருமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் வழக்கு பதிந்து அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூர் நகரில் போக்குவரத்து மாற்றம்…
ஒரு வழிப்பாதை
K.S mess எதிரே – வாகனங்கள் உள்ளே செல்ல மட்டுமே.. 80 Feet Road – வாகனங்கள் வெளியே வருவதற்கு மட்டுமே. செங்குந்தபுரத்திலிருந்து கோவை சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் 80 அடி சாலை வழியாக வெளியே செல்ல வேண்டும்.. செங்குந்தபுரத்திலிருந்து
மனோகரா கார்னர் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் திண்ணப்பா கார்னர் வழியாக செல்ல வேண்டும். கட்டாயமாக கனரக வாகனங்கள், நூல் வண்டிகள் செங்குந்தபரம், 80 அடி சாலை வழியாக கோவை சாலைக்கு செல்ல அனுமதி இல்லை..
கனரக வாகனங்கள்
மற்றும் லோடு ஆட்டோக்கள்
நூல் வண்டிகள், பார்சல் சர்வீஸ் வாகனங்களுக்கு
அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லோடு ஆட்டோக்கள், நூல் வண்டிகள், பார்சல் சர்வீஸ் வாகனங்கள் கரூர் To கோவை பிரதான சாலையை தவிர்த்துவிட்டு, திருக்காம்புலியூர் ரவுண்டானாவிலிருந்து அண்ணா சாலை, மகாத்மா காந்தி சாலை வழியாக செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம்,சர்ச் கார்னர், ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும்.. குறிப்பாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கனரகவாகனங்கள், பார்சல் சர்வீஸ் வாகனங்கள்
லோடு வாகனங்கள்,நூல் வண்டிகள் மாநகரத்திற்குள் உள்ளே வந்து பொருள்களை ஏற்றவோ,இறக்கவோ அனுமதி இல்லை..
அதேபோல் சின்னாண்டங் கோவில் பகுதிகளை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரியார் வளைவு வழியாக உள்ளே வந்து செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை பின்பற்றாத வாகனங்களுக்கு கட்டாயம் அபராதம்
விதிக்கப்படும் என்பதை
அறியவும்..
கடை உரிமையாளர்கள் ,ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிக வியாபாரிகளின் கவனத்திற்கு..
கடைகளுக்கு முன் விளம்பர போர்டுகளை வைக்கக்கூடாது.. மீறினால் விளம்பர போர்டுகள்
பறிமுதல் செய்யப்படும்.ஜவஹர் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் தங்கள் கடைகளுக்கு முன்னே
போக்குவரத்து காவல்துறையினரால் அடிக்கப்பட்ட கயிறுகளுக்கு உள்ளே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். இலகு ரக வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்களிடம்
ஈஸ்வரன் கோவில் சுற்றி உள்ள பகுதிகளிலும்,போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத
பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு சொல்லி அனுப்ப வேண்டும்..
மேலும் தங்கள் கடைகளுக்கு முன் புதிதாக எந்த ஒரு
தரைக்கடைகளையும் அமைப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது. கரூர் கோவை பிரதான
சாலையில் உள்ள தரைக் கடைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உள்ளே தள்ளி வைக்க வேண்டும்..அதேபோல் கரூர் To கோவை
பிரதான சாலை மற்றும் ஜவஹர் பஜார்,சர்ச் கார்னர் என கரூர்
மாநகரத்திற்குள் உள்ள
அனைத்து பகுதிகளிலும் லோடு வாகனங்களில்,காய்கறிகளையோ, பழங்களையோ நிறுத்தி விற்பதற்கு அனுமதி இல்லை.. என கரூர் நகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.