அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலாவதாக களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. அடுத்து குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 83 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே. அணி அபார வெற்றி பெற்றது. ஆறுதல் வெற்றியோடு தொடரை நிறைவு செய்தது.
சிஎஸ்கே. கேப்டன் டோனி கூறியது-
சில வீரர்களின் பெர்பாமென்ஸ் சரியாக இல்லை. மேலும் சீசனும் எங்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் இன்று நல்ல கிரிக்கெட் விளையாடினோம். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எனக்கு இன்னும் 4-5 மாதங்கள் உள்ளன. அவசரமும் இல்லை. உடலை பிட்டாக வச்சுக்கணும். நீங்க உங்க சிறந்த திறமைய வச்சுக்கணும். நான் ராஞ்சிக்கு போகிறேன். வீட்டிற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. சில பைக்கில் சுற்ற இருக்கிறேன்.
நான் ஓய்வு பெறுவேன் என்றும் சொல்லவில்லை, அதே சமயம் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை. யோசித்து விட்டு பின்னர் முடிவு செய்வேன். இந்த சீசன் தொடக்கத்தில் சென்னையில் நான்கு போட்டிகள் விளையாடியதில் இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எங்கள் அணியில் சில ஓட்டைகளும் இருந்தது. இம்முறை அனைத்தையும் சரி செய்து விட்டோம். அடுத்து சீசனில் ருதுராஜ்க்கு சென்னை அணி குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை.
14 வயது வீரரான வைபவ் என்னுடைய காலில் விழுந்த போது எனக்கு திடீரென்று வயதாகி விட்டதோ என தோன்றியது. ஆண்ட்ரே சித்தார்த் என்ற வீரர் பேருந்தில் என் அருகில் அமர்ந்திருந்தார் .அப்போது அவரின் வயதை கேட்டேன். என்னை விட 25 வயது குறைந்தவர். அப்போதுதான் நமக்கு வயதாகி விட்டது என்று நான் உணர்ந்தேன்” என்று அவர் கூறினார்.