டிச.12.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மழை காரணமாக இன்று (12.12.2024) ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.