ஜூலை.16.
கரூர் மாவட்டம்,கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம் பாளையம் காவல்சரகம், பூங்கா நகர்,நானப்பரப்புரோடு அருகில் கடந்த 26.05.2025 ஆம் தேதி சிவபிரகாஷ், 36/ என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட்டு01.06.2025 ஆம் தேதிதனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1,95,000/- மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகில் உள்ள CCTV கேமிரா பதிவுகளை ஆராய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் ஊரக உட்கோட்ட குற்ற பிரிவு தனிப்படையினர் பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தனர். பின்பு 14.06.2025 ஆம் தேதி கரூர் To சேலம் ரோடு, தளவாபாளையம் பிரிவு அருகில் வாகனதணிக்கை செய்துகொண்டிருந்தபோது CCTV கேமிராவில் பதிவான எண் கொண்ட Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த 1) கார்த்தி (எ) பொலார்டு கார்த்தி, 22. குப்பன கவுண்டர் தெரு, கருமலை கூடல், மேட்டூர் தாலூக்கா, சேலம் மாவட்டம். 2) விஜய்(எ)வெள்ளையன், 26.செல்லப்பன் தெரு, கருமலை கூடல், மேட்டூர் தாலூக்கா, சேலம் மாவட்டம்.3) அபி (எ) அபிமன்யு, 22. சின்னப்ப கவுண்டன்தெரு, கருமலைகூடல், மேட்டூர் தாலூக்கா, சேலம் மாவட்டம் ஆகியோர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது திருடியதை ஒப்புக்கொண்டனர். இதில் கார்த்தி மீது ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 10 திருட்டு வழக்குகளும், 2) விஜய் (எ) வெள்ளையன் மீது திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 15 திருட்டு வழக்குகளும், 3)அபிமன்யு மீது நாமக்கல், சேலம், தேனி, திருப்பூர், திருப்பூர் மாநகரம் ஆகிய மாவட்டங்களில் 15 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து திருட்டு போன 09 பவுன் நகைகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டு, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 2 அவர்களிடம் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட வேலாயுதம் பாளையம் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.