ஆக.23.
கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது மொத்த வார்டு உறுப்பினர்கள் 15. ஊராட்சி ஒன்றிய தலைவராக லதா ரங்கசாமி (அதிமுக) இருந்தார். இவரது கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், நிதி முறைகேடு செய்வதாகவும் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். அதிமுக கவுன்சிலர்கள் எட்டு பேர் திமுகவில் இணைந்தனர். சேர்மன் மீது குற்றச்சாட்டுகள் கூறிய நம்பிக்கையை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. தலைவர் பெரும்பான்மை இழந்ததை தொடர்ந்து இன்று தோகமலை ஒன்றிய குழுவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது வார்டு உறுப்பினர் சுகந்தி சசிகுமார் தலைவராக மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு செய்யவில்லை. இதனை அடுத்து சுகந்தி சசிகுமார் ஏக மனதாக தலைவர் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் இந்திராணி அறிவித்தார்.
தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சுகந்தி சசிகுமாருக்கு குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் ராமர் (முன்னாள் எம்எல்ஏ), அண்ணாதுரை மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.