மார்ச்.31.
கடந்த அதிமுக ஆட்சியில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சுமார் 100 இடங்களை பெற்று பலமான எதிர்கட்சியாக இருந்தது. எனினும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் எதிர்க்கட்சிகளுக்கு உரிய மரியாதையை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வழங்கி வருகின்றனர். சட்டமன்றத்திலும் எதிர் கருத்துக்களை பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்த போது கரூர் மாவட்டத்தை பொறுத்த அளவில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் ஒரு காங்கிரஸ் எம்பி இருந்தும் அவர்களிடம் கருத்தை கேட்பது கிடையாது தொகுதி வளர்ச்சி நிதியை கொடுத்தாலும் அதை உரிய முறையில் செலவிடாமல் அதிகாரிகள் ஆளுங்கட்சி சொல்படி செயல்பட்டு வந்தனர் . அப்போது எம்எல்ஏ வான செந்தில் பாலாஜி அரசு ஆலோசனை கூட்டங்களுக்கு, கலெக்டர் எதிர்க்கட்சிகளை அழைப்பது கிடையாது உரிய முறையில் தொகுதி வளர்ச்சி நிதியைசெலவிடுவது கிடையாது புறக்கணிக்கப்படுகிறோம் என குற்றம் சாட்டி வந்தார்.
இதனிடையே சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நடத்தும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார். இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பணியாற்றுவோம் என்று கூறினார்.