பதினேழு வயசு பையன் ஒருத்தன் ஆஸ்திரேலியா டெஸ்ட் டீமுக்கு உள்ள வரான்னா அது ஆச்சரியம்.. அவ்வளவு சீக்கிரம் ஆஸ்திரேலியா தேசிய அணில இடம் பிடிச்சிட முடியாது… அவன் வந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பவுலிங் போடுறான்….சின்னப்பய என்ன பண்ணுவானு பாத்தா…147கிமீ வேகத்துல போடுறான்…அவன் போட்ட பவுன்சர்ல உலக கிரிக்கெட்டின் பேட்டிங் புத்தகம் என்று அழைக்கக்கூடிய ஜாக் காலிஸ் தலைல அடிய போட்டு செதற விடுறான்….அவன் தான் பேட் கம்மின்ஸ் கண்டிப்பாக ஒரு நாள் இவன் பெரியாளா வருவான்னு மனசுல பட்டுச்சு.
.
அப்டியே அவனது பயணம் தொடருது…காயத்தால வெளியே போறான்…கொஞ்சம் நாள் கழித்து மீண்டும் வரான்…ஒவ்வொரு முறையும் அவன் அவனோட தவறை திருத்திக்கிட்டு தன்னை அப்கிரேடு பண்ணிக்கிறான்…டெஸ்ட் ஒன்டே டி20னு மூணு வித கிரிக்கெட்லயும் அவனோட பங்களிப்ப கரெக்டா செய்றான்…தவிர்க்கக்க முடியாத ஆளா மாறுறான்..
.
ரிக்கி பான்டிங் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு சரியான கேப்டன் அமையல..கிளார்க்…. ஸ்மித் …டிம் பெய்ன்…ஆரோன் பின்ச்… வார்னர்…ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றுலயே முத முறையாக டீம் உள்ள வரும் போதே ஜார்ஜ் பெய்லி கேப்டனா வரான்…ஆனால் மூணு பார்மேட்டுக்கும் சரியான கேப்டன் இல்லை… ரொம்ப தடுமாறுது ஆஸ்திரேலியா நிர்வாகம்… அப்ப தான் கம்மின்ஸ் கிட்ட கொடுக்குறாங்க…உன்னால என்ன முடியுமோ அத பண்ணுனு ….அவனுக்கு என்ன தெரியுமோ அத மட்டும் பண்ணான்…ஸ்லெட்ஜிங்குக்கு பேரு போன ஆஸ்திரேலியா டீம இவன் வந்த பிறகு அந்த பேர நீக்க வெச்சான்…நீங்க கடைசி சில வருடங்களில் எதாவது ஆஸ்திரேலியா அணி ஸ்லெட்ஜிங் பற்றி செய்தி கூட வந்து இருக்காது…காரணம் கம்மின்ஸ்.
.
ஒரு கேப்டன்னா சூப்பர் மேனா இருக்க தேவையில்லை.. என்ன செய்யனுமோ புரிஞ்சிக்கிட்டு அத செஞ்சா போதும்… கடந்த ஆஷஸ் டெஸ்ட் சீரிஸ் முதல் போட்டில வெற்றிக்கு கிட்டத்தட்ட50ரன் மேல தைவைப்பட்டப்ப லியான் கூட நின்று மேட்ச ஜெயிக்க வைத்தது..இந்த உலக கோப்பைல ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து எதிரான லீக் போட்டி..அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவோடு பேட்டிங் ஆடி கடைசி வரை களத்தில் இருந்ததுனு ஒரு கேப்டன் என்ன செய்யனும்னு புரிஞ்சி செஞ்சான் அதற்கான பொறுமை நிதானத்தோட…
.
காசுக்காக கிரிக்கெட் ஆடாம….ஆஷஸ் டி20 உலக கோப்பையின் போது ஐபிஎல் ஆடாம நிராகரிச்சான் கொரொனா சமயத்தில ஐபிஎல் மேட்ச்கள் நடந்த போது மக்கள் இவ்வளவு இக்கட்டில் இருக்கும் போது ஐபிஎல் மேட்ச் நடந்தே ஆவனுமானு தைரியமா கேள்வி கேட்டான் அந்த அர்ப்பணிப்பு உலக கோப்பையை அவன் கையில் தந்திருக்கிறது…
.
ஒரு பெரிய டோர்னமென்டு… நீங்க ஏன் டாஸ் வின் பண்ணி பவுலிங் எடுத்திங்க பனிப்பொழிவு பிட்ச் தன்மை வேற எதுவும் திட்டத்தோட தான் நீங்க டாஸ் வின் பண்ணி பீல்டிங் எடுத்திங்களானு ரவிசாஸ்திரி கேட்டப்ப….எல்லா மேட்சும் பர்ஸ்ட் பேட்டிங் தான் ஆடுறோம் இத சேஸ் பண்ணி பாப்பமேனு தான் மற்றபடி ஒண்ணு இல்லைனு அசால்ட்டா சொல்லிட்டுப்போய்ட்டான்..அதான் கம்மின்ஸ்.
.
பயிற்சி விடாமுயற்சி அர்ப்பணிப்பு தன்னம்பிக்கை தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமை கண்டிப்பாக நம்மலையும் ஒருநாள் சாம்பியன் ஆக்கும் என்பதற்கு கம்மின்ஸ் நமக்கு ஒரு உதாரணம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒன்டே கிரிக்கெட் வேர்ல்ட் கப் சாம்பியன்ஷிப் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்துக்கள்.
@CricketAus. வாழ்த்துக்கள்.
–சண்முகம் சின்னராஜ்.