ஜூன்.30.
பார்டாஸில் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் டி-20உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, கேப்டன் ரோஹித் சர்மா, சொதப்பல் ஆட்டத்தை ஆடி, கேசவ் மஹாராஜ் வீசிய 2வது ஓவரில் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து வந்த ரிஷப் பன்ட் அதே ஓவரில் டக்அவுட்டானதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் அவுட் என5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன் என பரிதாப நிலை ஏற்பட்டது.
விராட் கோலி மட்டும் தனி ஒருவனாக நின்று விளையாடி அதிரடி காட்டினார். அவருடன் அக்சர் படேல் 2 சிக்சர் விளாசி உற்சாகம் ஏற்படுத்தினார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 75 ரன்களைச் சேர்த்தது. அக்சர் படேல் 14-வது ஓவரில் 47 ரன்களுக்கு ரன் அவுட். ஆனார். 48 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய கோலி. 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை விளாசிய நிலையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 19-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 76 ரன்னில் அதிரடியை நிறுத்திக் கொண்டார். சிவம் துபே 27 ரன்கள் விளாச ஜடேஜா 2 ரன்கள் எடுத்தார் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. பும்ரா 2வதுஓவரில் ஹென்ரிக்ஸை அவுட் செய்ய, அடுத்த ஓவரில் கேப்டன் மார்க்ரமை வெளியேற்றினார் அர்ஷ்தீப். அதன் பிறகு ஸ்டப்ஸ் உடன் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அவரை அக்சர் படேல் அவுட் செய்தார்.
சளைக்காமல் விளையாடிய டிகாக், கிளாசனுடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். டிகாக் 39 ரன்களில் அர்ஷ்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் போனதும் கிளாசன் அதிரடி காட்டினார். நமது ரசிகர்கள் சோகம் அடைந்தனர். கிளாசன். டேவிட் மில்லருடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். எனினும் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து மிரள வைத்துவிட்டார்.
17-வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் விக்கெட்டை பாண்ட்யா வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார். அப்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன் என்ற நிலையில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே பாண்ட்யா கொடுத்தார். இது திருப்புமுனையாக அமைந்தது. பரபரப்பான நிலையில்
பும்ரா வீசிய முதல்2 பந்து டாட். அடுத்த பந்தில் சிங்கிள். எடுத்தார் மில்லர். நான்காவது பந்தில் யான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. 5 வதுபந்தும் டாட் ஆனது. அடுத்த பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுக்க,
கடைசி 12 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை அர்ஷ்தீப் வீசி திணறடித்தார். ஸ்ட்ரைக்கில் மகாராஜ் இருந்தார். முதல் 3 பந்து டாட். 3 வதுபந்தில் சிங்கிள். 4 வந்து பந்தில் மில்லர் 2 ரன், 5 வதுபந்தில் சிங்கிள். கடைசி பந்து டாட் ஆனது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. அந்த ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார் மில்லர். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் பிரமாதமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இது சிக்சராக மாறியிருந்தால் அந்த அணி வெற்றி பெற்றிருக்கும். பந்தை பிடித்து, அதை காற்றில் தூக்கிவிட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்தார். இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார் ரபாடா. அது எட்ஜ் ஆகி சென்றது. அடுத்து 4 பந்துகளில் 12 ரன் என்ற நிலையில் மீண்டும் திக்.திக்.. 3 வது, 4 வதுபந்தில் ஒரு ரன் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. மீண்டும் பரபரப்பு. பாண்டியா வொய்டு வீசினார். அந்த எக்ஸ்ட்ரா பந்தில் ரபாடா அவுட். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவை. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியா 7 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆகி உள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் விடைபெற்றார். அவருக்கு இது சிறப்பான வழியனுப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.