டிச.16.
திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அமராவதி அணை 4 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. அணையில் இருந்து 11,375 கன அடி நீர் திறந்து விடப்பட்டு, நதாராபுரம் தடுப்பணைக்கு 11337 கன அடி நீர் வந்தது. இருப்பினும் அமராவதி கிளை ஆறுகளில் கனமழை காரணமாக அதிக அளவு காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு 75 ஆயிரத்து 751 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமராவதி ஆற்றில் எப்போதாவது ஒருமுறைதான் தண்ணீர் வரும் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் கரூர் மக்களுக்கு அது அதிசயம். பாலங்களில் கூட்டம் கூட்டமாக நின்று தண்ணீர் வருவதை வேடிக்கை பார்த்தும் செல்பி எடுத்தும் வந்தநிலை மாறிவிட்டது. காரணம் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை. அமராவதி ஆற்றில் வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி. தற்போது 87.54 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 2483 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2429 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கரூர் ஆண்டங்கோவில் தடுப்பணைக்கு 8060 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றின் நீர்வரத்து குறைந்து விட்டதால் திருமுக்கூடலூர் என்ற இடத்தில் கலந்து காவிரிக்கு வந்துசேர்கின்ற நீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 16436 கன அட நீர் வருகிறது. இந்த நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டு திருச்சி நோக்கி செல்கிறது. மாயனூர் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. குடகனாறு அணையின் நீர்மட்டம் 27 அடி. நீர் இருப்பு 25.89.