பிப்.24.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் பேசுகையில், அத்திப்பாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதை தடுத்து பாதுகாப்பு ஏற்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
எனினும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்து போன ஆடுகள் வெறிநாய்கள் கடித்ததால் இறந்துள்ளது என கால்நடை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கால்நடைத் துறையினரை அணுகி ஆடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும். நாய் கடித்ததால் இறந்து போன ஆடுகளுக்கு முழு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றார்.