ஜன..17.
பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் ஆயிரம் காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 7மருத்துவ குழுக்கள் 20 டாக்டர்கள் உட்பட மருத்துவ குழுவினர் காளைகளுக்கு பரிசோதனை நடத்தினர் . 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
2 எஸ்பிக்கள், 8 ஏ டி எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 60 இன்ஸ்பெக்டர் உட்பட 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி0 நடிகர் சூரி உள்ளிட்டோர் போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.