செப்.22.
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் நொய்யல் மற்றும் தவுட்டுபாளையம் காவிரி கரையோர பகுதியில் அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் வட்டம் திருக்காம்புலியூர் காவிரி கரையோர பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி பனையிதைகளை நடவு செய்து பணியை தொடங்கி வைத்தனர். தமிழகத்தின் மாநில மரமான தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டுசெல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தமிழ்நாடு தன்னார்வலர்கள், தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரிக்கரையில் ஒருகோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
பளை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும். பனை நடுவதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நங்கு. பதநீர் பனைமட்டை நார். ஓலை வெல்லம். கருப்பட்டி, பனங்கற்கண்டு என பனையின் பயன்கள் அதிகம்.
தமிழ்நாடு முழுவதும் பனைவிதைகள் சேகரிக்கப்பட்டு 5கட்டங்களாக நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரிக்கரையின் இரு பக்கக்களிலும் 416 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் சுமார் 10 வட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் புகழூர், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டத்திற்குட்பட்ட 22 இடங்களில் காவிரிக்கரையில் மொந்தம் 26,000 பனை விதைகள் முதல் கட்டமாக இன்று நடவு செய்யப்பட்டது.
இப்பணியில் 3500 க்கும் மேற்பட்ட மாணவர்கள். மகளிர் குழுவினர். சுற்றுச்சூழல் அமைப்புகள் தன்னார்வலர்கள் சமூக சேவகர்கள். தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று பனை விதைகளை நடவுள்ளனர் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், குளித்தலை நகரமன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா, மாவட்ட வன அலுவலர் சண்முகம். குளித்தலை கோட்டாட்சியர்(பொ) கருணாகரன் நகராட்சி ஆணையர் நந்தகுமார், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் இராஜவேலு, தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரி கிருஷ்ணன். கரூர் விதைகள் அறக்கட்டளை சந்துரு. வட்டாட்சியர் சுரேஸ், கரூர் மாவட்ட முதலமைச்சரின் பசுமைத் தோழர் கோயல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார். குளித்தலை நகர்மன்ற ஆனந்தலெட்சுமி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிட்ட பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் சுயஉதவி குழுவினர். சுற்றுச்சூழல் அமைப்புகள் தன்னார்வலர்கள் சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் வனத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.