ஜன.7.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது . இதனால் அனைத்து விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகின்றன . பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பெட்ரோலை ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்புக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற பொதுவான கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ‘சர் ஜார்ஜ்’ மூலமாக ஒன்றிய அரசு 30 ரூபாயை எடுத்துக் கொள்கிறது. இதனை கைவிட்டால் பெட்ரோலை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டுவரத் தயார் என மாநில நிதித்துறை அமைச்சர் பிடிஆர் . பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
“செஸ் சர்சார்ஜ் மூலமாக ஒரு லிட்டருக்கு ரூ.30 ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது சரியல்ல. என்றைக்கு செஸ் சர்சார்ஜய் அவர்கள் கைவிடுகிறார்களோ, உடனடியாக ஜிஎஸ்டியில் சேர நாங்களும் தயார்”என நிதி அமைச்சர் ஒன்றிய அரசுக்கு அவர் தெரிவித்துள்ளார்.