ஜன.12.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சுபஸ்ரீ மரணம் குறித்த பதில் உரையில்,
சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து டிசம்பர் 19ஆம் தேதி ஆலந்துறை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். பின்னர் துலுக்கன் காடு தோட்டம் அருகில் கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்தது.
அவரது உடல் மீட்கப்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடல் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது . அவரது உடல் கணவர் பழனி குமாரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில் பதிவாகி இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைபேசிகள் உள்ளிட்ட கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது . விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என்றார்.