மார்ச்.29.
துபாய் அபுதாபி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். “துபாய் மற்றும் அபுதாபி பயணத்தில் 6 நிறுவனங்களுடன் ரூ. 6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு வாய்ப்பையும் விடக்கூடாது என #DubaiExpo2020-ல் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதை எடுத்துக்கூறி முதலீடுகளைத் திரட்டியுள்ளோம்.
‘நம்பர் 1- தமிழ்நாடு’ இலக்கை நோக்கிய இந்தப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது! என்றார்.