மே.18.
கவர்னரின் காலதாமதத்திற்கு கண்டனம் தெரிவித்து பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். பேரறிவாளனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் கால தாமதப்படுத்தியது தவறு. கருணை மனுக்கள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை ஆளுநர்கள் எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.