நவ.9.
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் 2019ஆம் ஆண்டில் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை ஒன்று தடுப்பணை கட்டப்பட்டு மூன்றரை மாதத்திலேயே உடைந்தது. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இரண்டாவது முறையாக உடைப்பு ஏற்பட்டு தடுப்பணையின் கட்டுமானங்கள் நீரில் அடித்துச் செல்லப்படன.
முதல் முறை தடுப்பணை உடைந்தபோது தடுப்பணை நன்றாக உள்ளது தடுப்புச் சுவர்கள் தான் அடித்துச் செல்லப்பட்டன என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதோடு உடைந்த பகுதியை செப்பனிட வேண்டும் எனக் கூறி மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அந்தத் தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்தன. இந்நிலையில் மதகு மட்டுமே காட்சியளிக்கின்றன. தொடர்ந்து நீர்வரத்து அதிகமானால் இந்த மதகு பகுதியும் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணம் ரூ 25 கோடி வீணானதுடன் இந்த தடுப்பணை மூலம் பயன் பெற்று வந்த 12 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்காத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.