நவ.3.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின்னகம் சேவை மையத்தில் வரும் அழைப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. சென்னையில் பகல் நேரத்தில் 1440பேர், இரவு நேரத்தில் 600 ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கொட்டும் மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வரும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் , வீடியோக்கள் பகிர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலே உள்ள புகைப்படம் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் எடுக்கப்பட்டது. லைட் ஹவுஸ் திண்டுக்கல் கார்னர், வஞ்சியம்மன் கோவில் தெரு பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையை நிவர்த்தி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.