ஜன.5.
தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்பில் தேங்காயும் சேர்த்து மக்களுக்கு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இன்று கரூர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக தேங்காய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விவசாய அணி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், நிர்வாகிகள் சக்திவேல், கோபிநாத், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் கூறினர். அங்கு கொண்டு வந்த டிராக்டர் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.