டிச.14.
திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டை யில் அமைந்துள்ள அமராவதி அணை நிரம்பியது. அணை நீர்மட்டம் 90அடி. இன்று காலை நிலவரப்படி 87.50 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமராவதி அணைக்கு 11 ஆயிரத்து 522 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 11,375 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தாராபுரம் தடுப்பணைக்கு 11337 கன அடி நீர் வருகிறது. இருப்பினும் அமராவதி கிளை ஆறுகளில் மழை காரணமாக அதிக அளவு வெள்ளநீர் வருவதால் கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு 75 ஆயிரத்து 751 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள். சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ. புகைப்படங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அமராவதி ஆற்றில் எப்போதாவது ஒருமுறைதான் தண்ணீர் வரும் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடினால் கரூர் மக்களுக்கு அது அதிசயம். பாலங்களில் கூட்டம் கூட்டமாக நின்று தண்ணீர் வருவதை வேடிக்கை பார்த்தும் செல்பி எடுத்தும் வருகின்றனர்.
அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் மாயனூர் கதவனைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. நேற்று வெறும் 2500 கன அடி நீர் வந்த நிலையில் இன்று 38 ஆயிரத்து 76 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இது மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது வாய்க்காலில் திறந்து விடப்படாமல் இந்த நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு திருச்சி நோக்கி செல்கிறது.
குடகனாறு அணையின் நீர்மட்டம் 27 அடி. நீர் இருப்பு 25.84 அடி. நீர்வரத்து 4000கனஅடி, நீர் தரப்பு 4000 கனஅடி.
கரூர் மாவட்டத்தில் மழை அளவு. ( மி.மீ)- கரூர் 31, அரவக்குறிச்சி 26 50, அணைப்பாளையம் 42, க. பரமத்தி 24.20, குளித்தலை 16.40, தோகமலை 43.40, கிருஷ்ணராயபுரம் 32.50, மாயனூர் 38, பஞ்சப்பட்டி 27, கடவூர் 22, பாலவிடுதி 11, மயிலம்பட்டி 8, மொத்தம் 322 மி.மீ. சராசரி 26 83மி.மீ.