மார்ச்.10.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். கரூர் மாவட்டம். குளித்தலையில் புதிதாக கட்டப்பட்ட பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இவ்வலுவலகம், தரைதளம் 208.04 ச.மீ. பரப்பளவும் மற்றும் முதல் தளம் 239.95 ச.மீ. பரப்பளவும் மொத்தம் 507.99 ச.மீ.பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைதளத்தில் அலுவலகம், மின் முத்திரை அறை கணிணி அறை, கழிவறை.காத்திருப்போர் அறை, வாகனம் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் பதிவறை சேமிப்பு அறை.உணவுக்கூடம் மற்றும் கழிவறைகள் உள்ளது. நிகழ்ச்சியில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, மாவட்ட பதிவாளர் குமார் மாவட்ட பதிவாளர் தணிக்கை அருள்ஜோதி, சார் பதிவளர் ஸ்ருதி, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பெறியாளர் சுஜாதா, உதவி செயற்பொறியாளர் சரோஜினி, நகர்மன்ற தலைவர் சகுந்தலாபல்விராஜா, துணைத் தலைவர் கணேசன், நகராட்சி ஆணையர் நந்தகுமார். முன்னாள் எம்எல்ஏ .இராமர் வட்டாட்சியர் இந்துமதி கலந்துகொண்டனர்.