டிச.15.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வும், கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வும் என மொத்தம் 8 அமர்வுகளில் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 2033 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.11,88,66,054/-மதிப்பிலான 1827 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்நிகழ்வினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர்/ மாவட்ட நீதிபதி.R. சண்முகசுந்தரம், துவக்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் P . அனுராதா செய்திருந்தார்.
கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஜன.21. கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்...