துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், சென்ற மாதம் 4,5 மற்றும் 11,12 தேதிகளில், 6500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துக்கொண்ட கரூர் மாவட்ட அளவிலான பள்ளி – கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான, கபடி, கொக்கோ, கையுந்து பந்து , எறிபந்து, கூடைப்பந்து, தடகள விளையாட்டுப் போட்டிகள் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி 1404 பேர் வெற்றி பெற்றனர். இன்று கரூர் பிரேம் மகாலில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவியரை வாழ்த்தி கரூர் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இடமாற்றம்
மார்ச்.24. கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்...