ஜன.19.
கரூரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெல்ப் 2 ஹெல்ப் தன்னார்வ இரத்ததான குழு தொடங்கப்பட்டது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட 17000 த்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய பயனாளிகளுக்கு இன்று வரை இக்குழு இரத்த தானம் வழங்கியுள்ளது.
அதிக முறை இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். முதன் முதலில் தானாக முன்வந்து இரத்ததானம் வழங்கி ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பை துவக்கி வைத்தது அமைச்சர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் விழா பற்றிய தகவல்களைத் தெரிவிக்கப்படும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி.
ஒருங்கிணைப்பாளர்கள்,
Help 2 Help.