டிச.5.
https://www.facebook.com/share/v/1PihaVFiZy
விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் சீரமைக்கும் பணியை முடுக்கி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்து ஆய்வு செய்து வருகிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,
பெஞ்சல் புயல் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் உருவாகியுள்ளன குறிப்பாக மின்கம்பங்கள் காற்று மழையால் சாய்ந்துள்ளன. இதனால் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் சென்றுமின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 லட்சத்து 56 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன இதில் 24000 மின் இணைப்புகள் மட்டும் மின் இணைப்பு வழங்காமல் உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மின்துறை பணியாளர்கள் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர். முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் இரண்டு நாட்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் தாலுகா கூடுவாபுண்டியில் புதிய மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுவாமுடியில் துணை மின் நிலையம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சாரத் துறை இயக்குனர் மஸ்கர்னஸ், ஒன்றிய பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் சமுதாய குமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர் ன.